Bomb Threat to CM
Bomb Threat to CM

Bomb Threat to CM – சென்னை: சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தது புரளி என கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், இன்று காலை 6.50 மணி அளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

அவ்வாறு கூறிவிட்டு, அந்த நபர் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் முதல்வர் இல்லத்திற்கு முழுமையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் வெடிகுண்டு நிபுணர்கள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து இன்று காலை முதல் அந்த பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சோதனையில் அது புரளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.. எனவே வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, சோதனையில் அது புரளி என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபர் பயன்படுத்திய எண் எந்த முகவரியில் உள்ளது என்ற விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது., தற்போது அது புரலி என உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரிடத்திலும் சற்று அமைதி நிலவுகிறது.