Bomb Blast Warning to Rajini Home
Bomb Blast Warning to Rajini Home

ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் 13 வயது சிறுவன் ஒருவர்.

Bomb Blast Warning to Rajini Home : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க அதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது பரவி வரும் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் வீட்டில் இருந்து வருகின்றனர்.

ரஜினி, விஜய், அஜித், கமல் கூட இல்லை எனக்கு இவரை தான் பிடிக்கும் – பிரபல தெலுங்கு நடிகர் ஓபன் டாக்!

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் மிரட்டல் விடுத்தது யார் என்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் கடலூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ரஜினி வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது. மேலும் அந்தச் சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதும் தெரிய வந்துள்ளது.