Bollywood Actor Says About Ajith
Bollywood Actor Says About Ajith

எனக்கு தல அஜித் அளவிற்கு மாஸ் கிடையாது என ஓப்பனாக கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் ஒருவர்.

Bollywood Actor Says About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று மங்காத்தா.

அப்பப்பா.. இத்தனை கோடியா?? அஜித், விஜய் படத்தையே தூக்கி சாப்பிட்ட தலைவி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் – அதிர வைக்கும் தகவல்!

இந்தப் படத்தை பிரபல முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அஜித் மட்டும் ஓகே சொன்னால் போதும் அடுத்த கணமே இரண்டாம் பாகத்தைஇயக்க நான் ரெடி என வெங்கட் பிரபு கூறி வருகிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக் குறித்து பிரபல நடிகர் ஒருவர் கூறிய விஷயத்தை வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளார்.

மங்காத்தா படத்தில் நடிக்க இருந்தது அஜித் இல்ல, நான் தான் மைக்கை பிடித்து புலம்பிய பிரபல நடிகர்.!

அதாவது மங்காத்தா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருந்த ஒரு பாலிவுட் நடிகர் எனக்கு மங்காத்தா படத்தை விட இன்னும் அதிகமான மாஸான காட்சிகள் வேண்டும். ஏனென்றால் எனக்கு அஜித் அளவிற்கு மாஸ் கிடையாது என கூறியுள்ளார்.

ஒரு பாலிவுட் நடிகர் தனக்கு அஜித் அளவிற்கு மாஸ் கிடையாது என கூறியிருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.