Bodhai Yeri Budhi Maari Review : Chandru KR, Radha Ravi, Dheeraj, Meera Mithun, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் சந்துரு இயக்கத்தில் தீரஜ், பிரைடனி சர்வா, ராதா ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் போதை ஏறி புத்தி மாறி.

Bodhai Yeri Budhi Maari Review :

படத்தின் கதைக்களம் :

படத்தின் நாயகனான தீரஜிற்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தீரஜின் நண்பர்கள் அவரை ஓரி பொய் சொல்லி ரூமிற்கு வர வைத்து பார்ட்டி கொண்டாடுகின்றனர்.

அப்போது போதை மருந்துக்கு அடிமையான நண்பன் ஒருவனிடம் இருந்த போதை மருந்தை விளையாட்டிற்காக நுகர்வது போல நுகர்கிறேன் நீங்க வீடியோ எடுங்க என நண்பன் ஒருவனிடம் கூறுகிறார்.

வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா ரியோ? – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்.!

அதே போல் விளையாட்டாக நுகர போய் உண்மையாக நுகர்ந்து விடுகிறார். இதனால் தீரஜின் வாழ்க்கை ஒரே நாளில் எப்படி மாறுகிறது? அதனால் அவர் வாழ்க்கையில் எப்படி அழிகிறது என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

படத்தில் நடித்துள்ள தீரஜ், நண்பர்கள், ராதா ரவி என அனைவருமே அவர்களின் கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்து கொடுத்து படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.

தொழில் நுட்பம் :

இசை மற்றும் ஒளிப்பதிவு :

கே.பி என்பவரின் பின்னணி இசை பின்னி பெடலெடுக்கிறது. பால சுப்பிரமணியனின் ஒளிப்பதிவு கன கச்சிதம்.

இயக்கம் :

சந்துரு புது முக இயக்குனராக என்று சொல்ல முடியாத அளவிற்கு வித்தியாசமான திரைக்கதையில் ஹாரர் திரில்லர் படமாக இந்த படத்தை கொண்டு சென்றுள்ளார். படத்தில் ஏற்படும் அனைத்து குழப்பங்களுக்கும் கிளைமேக்சில் பதில் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

தம்ப்ஸ் அப் :

1. நடிகர்களின் நடிப்பு
2. வித்தியாசமான திரைக்கதை
3. படத்தின் கரு

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான சில லாஜிக்கல் தவறுகள்.

REVIEW OVERVIEW
போதை ஏறி புத்தி மாறி படத்தின் விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
bodhai-yeri-budhi-maari-reviewமொத்தத்தில் போதை ஏறி புத்தி மாறி பாராட்ட வேண்டிய படம். போதை மருந்துகளை தொடவே கூடாது என்ற அச்சத்தை நிச்சயம் கொடுக்கும்.