தமிழ் சினிமாவில் காமெடி நடிகரான செந்தில் அவரின் மகன் பாபி சிம்ஹாவின் படத்தில் அறிமுகமாகியுள்ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாபி சிம்ஹா.

தமிழ் சினிமாவில் மக்கள் ரசித்து கொண்டாடிய  காமெடி நடிகர் தான் செந்தில். இவர் 80s,90s காலகட்டத்தில் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் நடித்து காமெடியில் கலக்கி இருப்பார். இவர்களின் காம்போவில் வெளியான காமெடிகளை இன்று வரை மக்கள் ரசித்து கொண்டிருக்கின்றனர்.

சினிமாவுக்கு அறிமுகமாகும் காமெடி நடிகர் செந்திலின் மகன் - பாபி சிம்ஹா வெளியிட்ட புகைப்படம்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் செந்தில் அவரின் மகனான ‘மணிகண்ட பிரபுவுடன்’ இணைந்து பாபிசிம்ஹா தயாரித்து, நடிக்கும் படமான “தடைஉடை”என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இந்தப் படத்தின் மூலம் செந்தில் அவரது மகனை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை பாபிசிம்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.