படங்களைப் பற்றிய ரிவ்யூ கொடுக்கும் ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் முன்பு வெளியான படங்களின் வெற்றி, தோல்வியை குறித்து பதிவிட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் கோபத்துடன் அவரை தாறுமாறாக கிண்டல் அடித்து வருகின்றனர்.

திரையரங்கில் வெளியாகும் பிரபல நடிகர்களின் புதிய படங்களை ரிவ்யூ செய்வதின் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவரின் ரிவியூக்களை கேட்டு ரசிகர்கள் அவ்வப்போது கலாய்த்து வருவார்கள். இதன் மூலமாகவே இவர் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானதை தொடர்ந்து அண்மையில் வெளியான விஜயின் “பீஸ்ட்” படத்தில் சிறிய காட்சியில் நடித்திருந்தார்.

தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்பு வெளியாகி இருந்த பிரபல நடிகர்களின் திரைப்படங்களை தரவரிசை படுத்தியுள்ளார். அதாவது படங்களின் வெற்றி தோல்வியை பற்றி கூறியுள்ளார். அதில் வெற்றி அடைந்த படங்கள் என்று கமலின் ‘விக்ரம்’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர் மற்றும் டான்’, தனுஷின் ‘கர்ணன்’ மற்றும் சிம்புவின் ‘மாநாடு’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதை அடுத்து தோல்வி அடைந்த படங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’, தல அஜித்தின் ‘வலிமை’, தளபதி விஜயின் ‘பீஸ்ட்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, கார்த்திக்கின் ‘சுல்தான்’ மற்றும் விஷால் நடிப்பில் வெளியான இரும்பு திரை படத்தை தொடர்ந்து வரிசையாக ஆறு படங்களும் தோல்வி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கோபத்தின் உச்சத்தில் இருந்து ப்ளூ சட்டை மாறனை ஆன்ட்டி இந்தியன் என்று செம்மையாக கிண்டல் அடித்து கமெண்டில் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர். தற்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.