blue sattta
விமர்சனம் என்கிற பெயரில் தமிழ் சினிமாவை பயங்கரமாக கலாய்க்கும் புளூசட்டை மாறன் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

Bluesatta maran directing new movie – பிரபல தமிழ் டாக்கிஸ் யுடியூப் விமர்சகர் புளூசட்டை மாறன். கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் தமிழ் திரைப்படங்களை கிண்டலடித்து வருபவர். இதனால் ரசிகர்களின் ஆதரவையும், தமிழ் திரையுலகின் எதிர்ப்பையும் பெற்றவர். பல எதிர்ப்புகளும், கண்டனமும் வந்த பின்பும் கூட அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

14 வருடம் கழித்து மீண்டும் அதே முயற்சியில் சிம்பு – கை கொடுக்குமா?

இவரின் விமர்சனத்தால் கோபமடைந்த பலரும், இவ்வளவு குறை கூறும் நீங்கள் ஒரு திரைப்படத்தை இயக்கி காட்டுங்கள் என பல வருடங்களாக சவால் விட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. தற்போது இந்த தகவல் உண்மையாகியுள்ளது. சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு, கசப்பான அனுபவத்தை பெற்ற சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்கிறார். சிம்பு படத்தை விட்டு விட்டு தற்போது புளூ சட்ட மாறன் படத்தை அவர் தயாரிக்கவுள்ளார்.