ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் அஜித்திடம் ஓர் கேள்வியை எழுப்பி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்களின் மத்தியில் அல்டிமேட் ஸ்டார் ஆக திகழ்பவர் அஜித் குமார். இவர் தற்போது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்த சமுத்திரகனி மற்றும் பல திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அஜித்திடம் கேள்வி எழுப்பிய ப்ளூ சட்டை மாறன்!!… ட்விட்டரில் பரவும் வைரல் பதிவு!.

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனது படங்களுக்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்ற குற்றசாட்டு பரவலாக எழுந்து வந்தது.

அஜித்திடம் கேள்வி எழுப்பிய ப்ளூ சட்டை மாறன்!!… ட்விட்டரில் பரவும் வைரல் பதிவு!.

சமீபத்தில் அது குறித்து அவர் நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என கூறியிருந்ததாக தகவல் வெளியாகியது. ஆனால் தினமும் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது இது குறித்து பிரபல யூடியூப் விமர்சகரும், ஆன்டி இந்தியன் படத்தின் இயக்குநருமான ப்ளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என்று கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோவை இறக்கி விளம்பரம் தேடிக்கொள்வது சரியா? இதேபோல படத்தின் ப்ரமோ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமே. படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள், மகிழ்வார்களே” என பதிவிட்டு இருந்தார். இதனால் கொந்தளித்த அஜித் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.