Blue Sattai_Maran
விஜய் ரூட்டில் ப்ளு சட்டை மாறன் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களுக்கு மோசமான விமர்சனங்களை கொடுத்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.

இவரின் மோசமான விமர்சனங்களால் ரசிகர்கள் முடிஞ்சா நீங்க ஒரு படம் எடுங்க பார்க்கலாம் என கூற எடுத்து காட்டுறேன் என ஒரு படத்தையும் இயக்க தொடங்கியுள்ளார் மாறன்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஆண்ட்டி இந்தியன் என பெயர் வைக்கலாம் என முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

என்னது ஆண்டி இந்தியனா? இது எச். ராஜா சொல்ற டைலாக் ஆச்சே என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். ஓ தலைவர் பிரீ ப்ரோமோஷனுக்கு அடி போடுறாரோ எனவும் சமூக வளையதள வாசிகள் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

விஜயின் மெர்சல் படத்தில் பாஜகவை-யும் மத்திய அரசையும் எதிர்த்து டைலாக்குகள் இருந்ததால் அந்த படத்திற்கு பிரீ ப்ரோமோஷன் கிடைத்தது. இதனால் ப்ளூ சட்டையும் அதே பாணியை போலாவ் பண்றாரோ என பேசி வருகின்றனர்.

உண்மை என்ன என்பது படக்குழு டைட்டிலை அறிவித்தால் தான் தெரிய வரும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.