ரஜினியை மறைமுகமாக பேசியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அமைச்சர் ஏ.வ வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
அந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியது, விமர்சனங்கள் என்பது தேவைதான்.ஆனால் மழை போல இருக்க வேண்டும் புயல் போல இருக்கக் கூடாது. எத்தனை புயல் அடித்தாலும் சாயாமல் நின்ற ஆலமரம் கருணாநிதி என்றும் கருணாநிதி இறந்த பிறகு அவரது புகழ் வளர்ந்து கொண்டே உள்ளது கலைஞர் கருணாநிதி குறித்து படம் எடுக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன் விமர்சனம் செய்யுங்கள் ஆனால் யார் மனதையும் நோகடிக்காதீர்கள் என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.
இதற்கு ப்ளூ சட்டை மாறன் ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற அரசியலுக்கு வரப்போகிறதா சொன்னாரு.கடைசியில் ஓய் தேவைப்படுது டாக்டர்கள் சொன்னதை கேட்கணும் அதனால கட்சி கேன்சல் அறிவிச்சாரு. இப்ப என்னடானா ஓய்வே இல்லாமல் ஆக்சன் படங்களா நடிச்சு தள்ளிக்கிட்டு இருக்காரே..,என அவருடைய பெயரை குறிப்பிடாமல் கலாய்த்துள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ரஜினியை மறைமுகமாக பேசியுள்ள ராபின் சட்டை மாறன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.