சீரியல் மாதிரி இருக்கு என வெளியான விமர்சனத்தால் கொந்தளித்த இயக்குனர் வம்சிக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது வாரிசு திரைப்படம்.

சீரியல் மாதிரி இருக்கு.. விமர்சனத்தால் கொந்தளித்த வம்சிக்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த பதிலடி - தீயாக பரவும் பதிவு

உலகம் முழுவதும் இந்த படம் கலையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. குறிப்பாக சிலர் வாரிசு திரைப்படம் சீரியல் மாதிரி இருப்பதாக விமர்சனங்களை கூறி வந்தனர்.

இதனால் இயக்குனர் வம்சி பேட்டி ஒன்றில் கோபமாக பேசியிருந்தார், இந்த படத்தை சீரியலுடன் ஒப்பிடாதீர்கள் என கூறினார். இது குறித்து ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

சீரியல் மாதிரி இருக்கு.. விமர்சனத்தால் கொந்தளித்த வம்சிக்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த பதிலடி - தீயாக பரவும் பதிவு

அதாவது, உண்மைய சொன்னா பயங்கரமா கொந்தளிக்கராறே? நாட்ல நீங்க மட்டும் தான் உழைக்கறீங்களா? மத்தவங்களுக்கு காசு சும்மா வருதா? போதாக்குறைக்கு தியாகம் வேற பண்றாங்களாம். சீரியல் மாதிரி இருக்குன்னு சொன்னது ஒரு குத்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகின்றன.