விஜய் கள்ளக்குறிச்சி சென்ற நிலையில் அஜித் ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
தமிழகத்தில் கள்ள சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு விரைந்து இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் புதிதாக அரசியல் கட்சித் தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ள தளபதி விஜய் விளையாட்டு கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் ரஜினி மற்றும் அஜித்தை வம்பு இழுத்து பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில் விஜய் கள்ளக்குறிச்சி சென்ற நிலையில் அது வைரலாகவே அஜித் துபாய் ரேஸில் பங்கேற்ற வீடியோவை வெளியிட சொன்னதாகவும் அதே போல் ரஜினி கூலி படத்திலிருந்து போட்டோவை வெளியிட சொன்னதாகவும் பதிவு செய்து உள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.