பிளடி ஸ்வீட் லியோ டைட்டில் ப்ரோமோ வீடியோவின் லேட்டஸ்ட் வியூவர்ஸ் அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 3ஆம் தேதி வெளியான இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ இதுவரை கடந்திருக்கும் பார்வையாளர்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த பிளடி ஸ்வீட் லியோ டைட்டில் ப்ரோமோ வீடியோ இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை இணையதளத்தில் சூப்பர் ஹிட் அடித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை ரசிகர்களும் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.