Blood Tube Blocking
Blood Tube Blocking

Blood Tube Blocking :

ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்களா ? ரத்த குழாய்களில் அடைப்பு இனிமேல் வரவே கூடாது என்று நினைப்பவர்களா நீங்கள். அப்பொழுது இந்த எளிமையான மருத்துவ முறையை கடைப்பிடியுங்கள்.

ரத்தக் குழாய்களில் அடைப்பு வர காரணம் :

1. கொழுப்புக்கள் இரத்தக் குழாய்களில் படிவதால் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

2. இயற்கையான உணவு முறைகளை எடுத்துக்கொள்ளாமல், வெளியே விற்கும் டப்பாக்களில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை உண்பதாலும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

3. உடலில் நைட்ரிக் ஆக்சைடு குறையும் பொழுதும் இதயம் சுருங்கி விரிவது குறைவாகும். ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்

ரத்த குழாய் அடைப்பு நீங்க மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள்:

1. தினமும் மாதுளம் பழச்சாறை உண்பதால் ,இதயம் பலப்படுவதோடு, ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பும் நீங்கும்.

2. கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரையில் அதிகளவு நைட்ரிக் ஆசிட் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

ரத்த குழாய் அடைப்பை நீக்க உதவும் கஷாயம் :
தேவையான பொருள்கள் :

எலுமிச்சைப்பழ சாறு =100ml
இஞ்சிச் சாறு. =100ml
பூண்டு சாறு. =100ml
ஆப்பிள் சைடர் வினிகர்.=100ml

செய்முறை :

* மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

* 400ml கஷாய நீர் 300ml கஷாய நீராக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.

* 300ml கஷாயத்தை சம அளவு பங்கு தேன் கலந்து ஒரு சுத்தமான டப்பாவில் அடைத்து வைக்க வேண்டும்.

* தினமும் காலை உணவுக்கு முன்னும் ,இரவு உணவுக்கு முன்னும் இந்த கஷாயத்தில் இருந்து ஒரு ஸ்பூன் குடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here