Black Tea
Black Tea

Black Tea

தினமும் பிளாக் டீ குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ளாக் டீயில் காப்ஃபைன், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கனிமச்சத்துக்கள், ப்ளூரைடு, மாங்கனீசு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் உள்ளது.

நன்மைகள்:
* ப்ளாக் டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

* ப்ளாக் டீ யைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைந்து,உடல் எடையை குறைக்கிறது.

* ப்ளாக் டீ யில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டாமினா அதிகரிக்கும்.

* ப்ளாக் டீ பற்கள் சொத்தையாவதைத் தடுக்கும்.

* இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக்கி, கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்டவிடாமல் தடுக்கிறது. இதனால் இதய நோய் வருவது குறைவாகிறது. புற்றுநோய் செல்களையும் அழிக்கிறது

* குறைந்த அளவிலான காப்ஃபைன் மூளையில் இரத்த ஓட்டம், நரம்பு மண்டலங்களை வலுவாக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.

* எலும்புகள் வலிமையடைவதோடு, அதில் உள்ள பைட்டோ கெமிக்கல்களால் ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here