Black Pepper Benefits
Black Pepper Benefits

Black Pepper Benefits

* நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் மருத்துவ குணம் கொண்ட பொருள் மிளகு. சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது தென் இந்தியர்களின் வழக்கம். மிளகில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

* கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும்.

* வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வர விஷத்தன்மை மாறும்.

* மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

* மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலை பாரம் குணமாகும்

* சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம அளவு எடுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும்.

* வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பவுடராக்கி அதை சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகள் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here