Black Hair :
Black Hair :

 Change White hair to Black hair naturally :

உங்கள் தோற்றம் இளநரையால் பொலிவிழக்கின்றதா? இதோ இளநரையைப் போக்கும் எளிய இயற்கை மருத்துவம்!

இளநரையைப் போக்கும் எளிய இயற்கை மருத்துவம்:

ஒருசிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை முடி வந்துவிடுகிறது. இதற்கு காரணகள் ,சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் பரம்பரை போன்றவை. இவற்றை போக்க மிகச்சிறந்த இயற்கை முறை இதோ…

1. தேங்காய் எண்ணெயில் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து பின்னர் அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

2. நெய் கூட இள நரையை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.

3. நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கல்ப்பில் படும்படி மசாஜ் செய்து வந்தால், வெள்ளைமுடி மறைவதை நன்கு காணலாம்.

4. கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து அதனை தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

5. ஒரு கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவந்தால், இள நரையை விரைவில் போக்கலாம்.

6. வெந்தயம் அரைத்து பேஸ்ட் செய்து தலைக்கு தடவி ஊற வைத்து அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், நரைமுடி மறையும்.

7. தயிரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

8. கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும். இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.

இதை தலையில் தேய்த்து 10 நிமிடம் மிதமான வெயிலில் நிற்கவும். பின்னர் குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here