இதோட நிறுத்திக்கோங்கஇல்லாட்டி நடவடிக்கை பாயும் என சூர்யாவை எச்சரித்துள்ளனர் பாஜகவினர்.

Bjp Warning to Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார். மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை, ஆகியவை தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக கூறி நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசு ஒளிப்பதிவு சட்டம் என புதிய விதியை கொண்டுவந்தது எதிர்த்தும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா உள்நோக்கத்துடன் பாஜக கொண்டுவரும் திட்டங்கள் பற்றி அவதூறாகப் பேசி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை கூறி வருவதாக பாஜக இளைஞரணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அருவருப்பான பேச்சு : மன்னிப்பு கோரினார் தினேஷ் கார்த்திக்

மேலும் நடிகர் சூர்யா பாஜகவை குறை சொல்வதை இதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் இல்லை என் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளனர். பாஜகவினரின் இந்த செயல் சூர்யா ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

சங்கீதா அக்கா Life Time Support – புகைப்படத்தை பகிர்ந்த Atlee மனைவி Priya..! | Ask Me | Social Media