BJP Vs Suriya : Thala Thalapathy Fans Support to Suriya.! | Kollywood Cinema News | Thala Ajith | Thalapathy Vijay | Suriya Vs BJP
சூர்யா புதிய கல்வி கொள்கை பற்றி பேசியதற்கு மத்திய மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தல தளபதி ரசிகர்கள் சூர்யாவிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

BJP Vs Suriya : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலமாக கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார். அவர்களின் கல்வி தரத்தை உயர்த்த முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்த அகரம் பவுண்டேஷனின் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது, அதில் சூர்யா மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை விமர்சனம் செய்ய அதற்கு பாஜக அரசும் அதிமுக அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டார்களான அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதற்காக #SuriyaFCWarnsBJPnADMK #standwithsurya ஆகிய ஹேஸ்டேக்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.