BJP H Raja
BJP H Raja

BJP H Raja – சிவகங்கை: திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் டிஷ்யூ பேப்பர் மாதிரி தான் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வரும் லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தலைமையில், பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. மேலும் லோக்சபாவில் மொத்தம் 5 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

இந்நிலையில், சிவகங்கை லோக்சபா தொகுதி, மானாமதுரை சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிக்கான கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி கட்சியான பாஜக சார்பில் தேசிய செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்றார்.

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:40 நாட்களுக்கு முன்னதாக இருந்த நிலை வேறு இன்றைக்கு உள்ள நிலை வேறு? ஏன் என்றால் 40 தொகுதிகள் மட்டுமில்லாமல் இடைத்தேர்தல்களிலும் மெகா கூட்டணியே வெற்றி பெறும்.

அதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு கொண்டுவந்த திட்டங்கள் உதவியாக இருக்கும் என கூறியிருந்தார்.

மேலும் கஜா புயலின் போது நேரில் சென்று பார்த்தேன், லட்சக்கணக்கான மின் கம்பங்கள் 1 வாரத்திற்குள் புனரமைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை சிறப்பாக செயல்படுத்தினார் தெரிவித்தார்.

பிரதமர் மோடி குறித்து பேசுகையில், உலக புகழ்பெற்ற அரசாங்கம் மோடி தலைமையில் உள்ளது. இந்த இரு சக்திகள் இணைந்துள்ளபோது வேறு எந்த சக்திகளும் பூமியில் இல்லை என புகழ்ந்து பேசினார்.

பின்னர் திமுக அறிக்கை குறித்து பேசுகையில், “திமுகவின் தேர்தல் அறிக்கை சாதாரண டிஷ்யூ பேப்பர் மாதிரி தான்.. காரணம் என்னவென்றால்,.1 கோடி மக்கள் நல பணியாளர்கள், 50 லட்சம் சாலை பணியாளர்கள், தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி குடும்பங்கள் உள்ளது.

இவ்வளவு பேருக்கு வேலை செய்ய இடமிருக்கிறதா? அவர்களுக்கு ஊதியம் அளிக்க நிதி இருக்கிறதா? நீதிமன்றமே இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது.ஆகவே திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது வெற்று காகிதம் தான் “என்று ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.