விஜய்சேதுபதி மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

BJP Against Vijay Sethupathi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சமீபகாலமாக இவர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதிலும் குறிப்பாக இவர் இந்து மதம் பற்றி பேசும் பேச்சுகள் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

என் மீது அன்பை பொழிந்தவனை இழந்து விட்டேன். மாஸ்டர் பட நடிகைக்கு நடந்த சோகம்

கடந்த வருடம் சன்டிவியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் இந்து மதம் பற்றி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பலரும் விஜய் சேதுபதிக்கு எதிராக தங்களது கண்டனங்களை கூறி வந்தனர்.

இந்தநிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் விஜய்சேதுபதி பேசிய பேச்சு நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும்ஜாதி மத கலவரங்களை தூண்டும் வகையிலும் இருப்பதாக கூறி அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்.

விஜய்க்கு எதிராக பாஜக போர்க்கொடி தூக்கிய நிலையில் இன்று விஜய் சேதுபதியும் சிக்கிக் கொண்டுள்ளார்