Bitter Gourd Masala : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Bitter Gourd Masala :

Bitter Gourd Masala :  தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – அரை கப், பாகற்காய் – 5,
மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்,
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்,
மாங்காய் பவுடர் – அரை ஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
சோம்பு – அரை ஸ்பூன்,
நறுக்கிய மாங்காய் – சிறிதளவு,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

1) பாகற்காயின் மேல் தோலை லேசாக சீவிக் கொள்ளவும். பின்னர் இரண்டாக வெட்டி நடுப்பகுதியில் உப்பு கலந்து அரை மணி நேரம் வெயிலில் உலர வைக்கவும்.

2) பின்னர் அவைகளை நன்றாக கழுவிக் கொள்ளவும். வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மாங்காய் பவுடர், சீரகம், பெருங்காயத் தூள், சோம்பு, மாங்காய் துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாகற்காயின் உள்ளே வைக்கவும்.

3) அதைக் கீழே விழாத அளவுக்கு நூலினால் கட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காயை கலவையுடன் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி எடுத்து சுவைக்கலாம்.

4) ஆரோக்கியமான பாகற்காய் மசாலா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here