BitCoin Scammers on Twitter

முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்கில் ஹேக்கர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

Bitcoin Scammers on Twitter : சமூக வலைதளப் பக்கங்களில் ஹேக்கர்கள் புகுந்து அதனை தங்களது கட்டுக்குள் கொண்டு வருவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பெரும்பாலாலும் பிரபலமானவர்கள், முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் போன்றவர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்படும்.

இந்த நிலையில் தற்போது Joe Biden, Kanye West, Michael Bloomberg முற்றும் Jeff Bezos ஆகியோர்களின் ட்விட்டர் கணக்குகள் Bitcoin scammers-களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு பிட்காயின்களை அனுப்பினால் அது இரண்டு மடங்காக திருப்பி அனுப்பப்படும் என இவர்களின் ட்விட்டர் கணக்குகளில் பதிவு ஒன்று பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பின்னர் இவர்கள் கணக்குகளில் இருந்து அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் ட்விட்டரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.