பைசன் படப்பிடிப்பு குறித்து மாரி செல்வராஜ் அப்டேட் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கர்ணன்,மாமன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து பிரபலமானவர் மாரி செல்வராஜ்.
இவரது இயக்கத்தில் “வாழை” என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து “பைசன்” என்ற படத்தை இயக்கி வருகிறார். விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் அனுபமா ,லால், பசுபதி, ரதிஷா விஜயன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
தற்போது இந்தப் படத்தின் லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட மாரி செல்வராஜ், படப்பிடிப்பு 60% நிறைவடைந்து விட்டதாகவும் இந்த படம் முடிந்த கையோடு தனுஷை வைத்து படம் தொடங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் படம் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பைசன் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.