Biometric Attendance : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Biometric machine, Attendance Machine

Biometric Attendance :

தருமபுரி: தருமபுரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவிகளில் தமிழ் மொழியை புறக்கணித்து இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளதை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்களின் வருகை பதிவை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சோதனை முயற்சியாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டமானது, இந்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு வந்த உடனேயே தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டு இருக்கும் பயோமெட்ரிக் கருவியில் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்து தங்களது வருகை நேரத்தை உறுதி செய்வார்கள்.

இது அன்றாடம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த நேரத்தை இந்த இயந்திரம் பதிவு செய்துவிடும்.

இந்நிலையில் தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழ் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட ஆசிரியர் வருகை பயோமெட்ரிக் கருவியில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு : அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு

பயோமெட்ரிக் கருவியில் முதலில் ஆங்கிலம் மட்டும் இருந்த நிலையில், தற்போது இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இவ்வாறு பயோமெட்ரிக் கருவியில் தமிழ் இல்லாமல் இந்தி மொழி இருப்பதை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முன்னதாக, தபால்துறை தேர்வில் தமிழ் இல்லாததால் சர்ச்சையாகி பிரச்சனை முடிந்த இந்நிலையில் அடுத்த சர்ச்சையாக இந்த பயோமெட்ரிக் முறை உருவாகியுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here