நிர்வாணமாக நடிப்பீர்களா என கேட்டதற்கு ஓபனாக பதில் அளித்துள்ளார் பிந்து மாதவி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிந்து மாதவி. சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தெலுங்குவில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார். இந்த நிலையில் பிந்து மாதவி அளித்துள்ள பேட்டி ஒன்றில் நிர்வாணமாக நடிப்பது குறித்து பேசி உள்ளார்.

அதாவது நடிகைகள் யாரும் வாய்ப்புக்காக நிர்வாணமாக நடிப்பதில்லை, படத்திற்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு வேலை படத்திற்காக நான் அப்படி நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவானால் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

பிந்து மாதவியின் இந்த பேட்டி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.