
Billa Pandi Scenes Deleted : தமிழக அமைச்சர்களின் அறிவுரையை ஏற்று பில்லா பாண்டி படத்திலும் காட்சிகள் நீக்கப்பட்டதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
J.K.பிலிம் புரொடக்ஷன் சார்பாக K.C.பிரபாத் தயாரிப்பில் R.K.சுரேஷ், K.C.பிரபாத், இந்துஜா, சாந்தினி நடிப்பில் ராஜ் சேதுபதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “பில்லா பாண்டி” பட்டி தொட்டி எங்கும் வெற்றிநடை போடுகிறது
நேற்று பில்லா பாண்டி படத்தை அமைச்சர்கள் திரு.K.T.ராஜேந்திர பாலாஜி, திரு. கடம்பூர் C ராஜூ, திரு. உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றுன் திரு தலவாய் சுந்தரம் ஆகியோர் கண்டு களித்தனர்.
படத்தை வெகுவாக பாராட்டிய அமைச்சர்கள் படத்தில் வரும் சில வசனங்களை தவிர்க்குமாறு அறிவுறித்தினர்.
அவர்களின் அறிவுறத்தலின் பெயரில் குறிப்பிடப்பட்ட வசனங்கள் “Mute” செய்யப்பட்டு நாளை முதல் வெளியாகவுள்ளது.
படத்தின் நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் மற்றும் வில்லனாக நடித்துள்ள கே.சி பிரபாத் ஆகியோரின் நடிப்பு பாராட்டுகளை பெற்று வருகிறது.
தல அஜித்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு தல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.