Bigilu Bigilu Song Record
Bigilu Bigilu Song Record

பிகில் படத்தின் பாடல் மீண்டும் ஒரு பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளது ரசிகர்களை குஷி ஆகி உள்ளது.

Bigilu Bigilu Song Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனை படைத்தது.

அது மட்டுமல்லாமல் தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் யூட்யூபில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

இதெல்லாம் சரியில்ல ஜோ.. பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து விட்டு சூர்யாவுக்கு போன் அடித்த அஜித் – என்ன கூறியுள்ளார் பாருங்க!

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் பாடல்கள் 50 மில்லியனுக்கும் மேலாக பார்வையாளர்களை பெற்று தினம் தினம் சாதனைகளைப் படைத்து வருகின்றன.

இந்த சாதனைகளுக்கு நடுவே பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள பிகிலு பிகிலு மா என்ற பாடல் தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புது சாதனையை படைத்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்த கொண்டாட்டத்திலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது.

இந்த வருட தீபாவளி அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு தான் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.