Bigil
சென்னையில் பிகில் படத்தின் வசூல் பாதியாக குறைந்துள்ளது. அது குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த பிகில் திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று ( அக்டோபர் 25 ) தீபாவளி விருந்தாக வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்தாலும் ஒரு சிலர் நெகடிவ் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

ஆனாலும் இதுவரை படத்தின் வசூலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்து வந்தது, 5 நாட்கள் முடிவில் பிகில் படத்தின் வசூல் பாதியாக குறைந்துள்ளது.

சென்னையில் இதுவரையிலான வசூல் நிலவரம் இதோ

1ம் நாள்: ரூ.1.79 கோடி

2ம் நாள்: ரூ.1.73 கோடி

3ம் நாள்: ரூ.1.74 கோடி

4ம் நாள்: ரூ.1.72 கோடி

5ம் நாள்: ரூ.84 லட்சம்

ஆனால் படத்தின் மொத்த வசூலையும் சேர்த்து ரூ 200 கோடியை தாண்டி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

YouTube video

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.