Bigil Vs Viswasam TRP Rating

TRP போட்டியில் பிகில் படத்தாலும் விசுவாச சாதனையை முறியடிக்க முடியாமல் போயுள்ளது.

Bigil Vs Viswasam TRP Report : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகும் போது எப்போதும் மாபெரும் வரவேற்பு இருக்கும்.

இவர்களின் படங்கள் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்படும் போதும் TRP சாதனையில் முதலிடம் பிடிப்பது எந்த படம் என்பது குறித்த விவரங்களை அறிந்துகொள்ள அஜித் விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பார்கள்.

விஸ்வாசம் திரைப்படம் தொடர்ந்து TRP-யில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சன் டிவியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து விஜய் நடித்த திரைப்படங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

ஜூலை மாத TRP-யில் மாஸ் காட்டிய 10 படங்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

தெறி திரைப்படம் ஒளிபரப்பான போது அதுவும் விஸ்வாசம் படத்தின் டிஆர்பி சாதனையை முறியடிக்க தவறியது. இதனையடுத்து இந்தவாரம் பிகில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.

ஆனால் பிகில் திரைப்படம் 16.9 இம்பெரஸனை பெற்று கடந்த வார TRP-யில் முதலிடம் பிடித்தாலும் விசுவாசம் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்க முடியாமல் தவறியுள்ளது.

ஆம், விஸ்வாசம் திரைப்படம் 18.1 இம்ப்ரஷனுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை தல TRP கிங் என்பதை உறுதி செய்திருப்பதாக இதனை கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.