நான்கே நாளில் விஸ்வாசம் ட்ரைலரின் மொத்த சாதனையையும் பிகில் ட்ரைலர் முறியடித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் ட்ரைலர் கடந்த சனிக்கிழமை வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த ட்ரைலர் வெளியான வேகத்திலேயே சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது இந்த ட்ரைலர் விஸ்வாசம் ட்ரைலர் மொத்தமாக படைத்திருந்த சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
விஸ்வாசம் ட்ரைலரின் சாதனையை பிகில் ட்ரைலர் நான்கே நாளில் முறியடித்திருப்பது ரசிகர்களை உச்சகட்ட கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.