Bigil Vs Kaithi Release Date
பிகில், கைதி ஆகிய படங்களில் முதலில் ரிலீசாக போவது எது? என்பது குறித்த தகவலை தியேட்டர் உரிமையாளர் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

இந்த படத்துடன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் மோத இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் சங்கத்தமிழன் தீபாவளி ரேஸில் இருந்து விலகி கொண்டது. கைதியும் பிகிலும் மோதி கொள்வது உறுதியானது.

இந்நிலையில் தற்போது ரோகினி தியேட்டர் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிகில் திரைப்படம் வரும் 24-ம் தேதி வெளியாக ரிலீசாக வாய்ப்பிருப்பதாகவும் கைதி அடுத்த நாள் அடுத்த நாள் அதாவது 25-ம் தேதி ரிலீஸாக வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை எனவும் படக்குழு என்ன முடிவெடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.