Bigil Trailer Vs Valimai Trailer

பிகில் படத்தின் சாதனையை முறியடிக்க தவறியுள்ளது வலிமை பட ட்ரெய்லர்.

Bigil Trailer Vs Valimai Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் மிக பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்த்ததை விட பல மடங்கு படு மாஸாக இந்த ட்ரைலர் வெளியானது.

சோனி மியூசிக் மற்றும் ஜீ ஸ்டுடியோ என இரண்டு யூடியூப் பக்கங்களில் இந்த ட்ரெய்லர் வெளியானது. சோனி மியூசிக் வீட்டு பக்கத்தில் பத்து நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை இந்த ட்ரைலர் பெற்றுள்ளது. ஆனால் விஜய் நடிப்பில் வெளியான திகில் படத்தின் ட்ரெய்லர் பத்து நிமிடத்திற்கு உள்ளாகவே 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. இதனால் வலிமை டிரைலர் பிகில் படத்தின் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது என கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த Velan படக்குழு.! | Tamil | Mugen | Soori | Meenakshi | Kavin |HD

2 யூ ட்யூப் பக்கங்களில் வலிமை டிரைலர் வெளியானது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஒரே ஒரு கட்டத்தில் வெளியாகி இருந்தால் நிச்சயம் பார்வையாளர்களின் எண்ணிக்கை சிதறி இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.