Bigil Atlee
இதுக்கு தான் அட்லீ ஷாருக்கானை சந்தித்தாரா என நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ட்ரைலரை பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நெட்டிசன்கள் ட்ரைலரை ட்ரோல் செய்யவும் தொடங்கியுள்ளனர். பிகில் ட்ரைலரில் குட் மார்னிங் கோச் என இந்துஜா கூற விஜய் கேக்கல என கூறுவார்.

அதே போல் பாலிவுட்டில் ஷாருக்கானின் திரைப்பட காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. இதனை வைத்து பிகிலை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் ட்ரைலர் விஜய் பிகிலே என கத்தும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதை வைத்து விக்ஸ் விளம்பர படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.