பிகில் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.
தீபாவளிக்கு தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தி பாக்ஸ் ஆஃபீஸிலும் சாதனை படைத்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து பிகில் திரைப்படம் அமேசான் ப்ரைம் விடீயோவிலும் பிகில் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இதனால் ரசிகர்கள் இனி பிகில் திரைப்படத்தை அவர்களின் போன்களிலேயே எப்போது வேண்டுமானாலும் பார்த்து மகிழலாம்.