பிகில் படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பது இன்று வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. ஆனால் ரிலீஸ் தேதி என்ன என்பதை இதுவரை படக்குழு சொல்லாமல் இருந்து வந்தது.
தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த டீவீட்டில் இன்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
பிகில் தீபாவளிக்கு முன்பாகவே ரிலீஸாக போகிறதா? அல்லது தீபாவளி அன்றே ரிலீசா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#BigilReleaseDate at 6:00pm ???????????? #PodraVediya #BigilDeepavali ????????????@actorvijay @Ags_production @Atlee_dir @arrahman #Nayanthara
— Archana Kalpathi (@archanakalpathi) October 17, 2019