Bigil
2019-ல் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ஹேஸ்டேக்குகளில் பிகில் திரைப்படத்தின் ஹேஸ்டேக் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இது குறித்து அறிவிப்பை ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகத்தில் எந்த மூலையில் எது நடந்தாலும் அதனை விவாதிக்க மேலும் பல தகவல்களை தெரிந்து சமூக வளையதளங்களில் பேருதவியாக இருந்து வருகின்றன. குறிப்பாக ட்விட்டர்.

இந்த 2019-ம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட ஹேஸ்டேக்கள் என்ன என்பதை பற்றி ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதில் ஒரே ஒரு தமிழ் படத்தின் ஹேஸ்டேக் மட்டும் தான் இடம்பெற்றுள்ளது. அது தளபதி விஜயின் பிகில் பட ஹேஸ்டேக் மட்டும் தான்.

அதே போல் விஜய் பிகில் குறித்து செய்த ட்வீட் தான் அதிக 2019-ல் அதிக ரி-ட்வீட்களை பெற்ற டீவீட்டாகவும் கருத்துகளுடன் அதிக ரி-ட்வீட் பெற்ற ட்வீட்டாகவும் இடம் பெற்றுள்ளது.

டாப் 10 சினிமா பிரபலங்கள் 2019 லிஸ்டில் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.