Thalapathy Vijay

தியேட்டர்கள் திறக்கப்படும் நிலையில் தளபதி விஜயின் திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக செம மாஸ் தகவலை வெளியிட்டுள்ளது பிரபல தியேட்டர்ஸ் நிறுவனம்.

Bigil Re-release Update in Pondicherry : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதலால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், பூங்காக்கள் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

நான்கு மாத இடைவெளிக்கு பிறகு 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள சண்முகா தியேட்டர் நிர்வாகம் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பிகில் படத்தை பழையபடி பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.

திறக்கப்படும் தியேட்டர்கள்.. ரிலீசாகுது தளபதி படம் - மாஸான அறிவிப்பை வெளியிட்ட தியேட்டர் நிர்வாகம்.!!