Bigil Profit in Kerala
தளபதி விஜயின் பிகில் திரைப்படம் அவருடைய கோட்டையான கேரளாவில் பெரும் சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான பிகில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, அதே சமயம் ஒரு சிலர் இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தையும் கூறி வருகின்றனர்.

அப்படியிருந்தும் பிகில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தை அடுத்து விஜயின் கோட்டையான கேரளாவில் வெறும் நான்கே நாளில் பிகில் படம் லாபம் பார்த்துள்ளது.

ஆம், இதுவரை பிகில் திரைப்படம் கேரளாவில் 11.5 கோடி வசூல் செய்திருப்பதாகவும் விநியோகிஸ்தருக்கு ரூ 5.11 கோடி வரை ஷேர் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.