Bigil Producer's Tweet About Nayanthara : Attachment is Here | Thalapathy Vijay | Atlee | Kathir | Indhuja | Kollywood Cinema News
பிகில் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் தயாரிப்பாளர் அவரை பற்றி ட்வீட் போட்டுள்ளார்.

Bigil Producer Tweet About Nayanthara : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும் கதிர், இந்துஜா, ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, வர்ஷா பொல்லம்மா, ரோபோ ஷங்கரின் மகள் என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது, ஆனால் இதில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணமும் இதுவரை சரியாக தெரிவரவில்லை.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நயன்தாராவிற்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார்.

மேலும் நீங்கள் ஏற்கனவே AGS குடும்பத்தில் இணைந்து விட்டீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.