Bigil producer Teases Ajith fans : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Latest Cinema News

Bigil producer Teases Ajith fans :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

ரொம்ப ஓவரா தான்யா போறீங்க, கடுப்பேற்றும் இரண்டாவது ப்ரோமோ.!

இதைதொடர்ந்து இப்படத்தின் தமிழக விற்பனை தற்போது முடிந்துள்ளது. பிரபல ஸ்க்ரீன் சீன் நிறுவனம் 75 கோடிவரை கொடுத்து இதன் உரிமையை கைப்பற்றியுள்ளது. இதை படக்குழுவும் தற்போது அறிவித்துள்ளனர்.

ஆனால் நேற்று அஜித்தின் நேர்கொண்ட பார்வை இன்னும் வியாபாரமாக வில்லை என்று விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்ததை அடுத்து தற்போது இப்படியொரு அறிவிப்பை அவர்கள் வெளியிட்டதால் வேண்டுமென்றே அஜித் ரசிகர்களை அவர் கடுப்பேற்றுகிறார் என்று கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.