பிகில் படத்தை தொடர்ந்து மீண்டும் சூப்பர் சிங்கர் பூவையார்க்கு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் பூவையார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரஹ்மான் இசையில் விஜயுடன் இணைந்து வெறித்தனம் பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது பூவையாருக்கு அடுத்த ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி இசையில் பூவையார் பாடல் ஒன்றை பாட உள்ளார்.
இதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Big fan of this little guy here ❤️ I promised him, i’ll make a single with him & its done ???? pic.twitter.com/UJhxTk43Ro
— Hiphop Tamizha (@hiphoptamizha) November 23, 2019