நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்பட டீசர் வீடியோ பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

Bigil movie teaser release date is leakedலைக்கா நிறுவனம் தயாரிக்க அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இப்படம் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இப்படத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தினமும் இப்படத்தை பற்றிய புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு அப்டேட்டையும் விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.

பிகில் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ்? நள்ளிரவில் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.!

சமீபத்தில் கூட இப்படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடல் வரி வீடியோ வெளியாகி யுடியூபில் சாதனை படைத்தது. இதுவரை இப்பாடலை 85 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பாடல் வீடியோவை பார்த்துள்ளனர்.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பிகில் திரைப்படத்தின் டீசர் வீடியோ வருகிற 21ம் தேதி வெளியாகும் என தமிழ் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்கு முன்பு இதே அட்லீ-விஜய் காம்பினேஷனில் உருவான ‘மெர்சல்’ திரைப்படத்தின் டீசர் இதே தேதியில்தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.