பிகில் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சில விசயங்கள் துளி கூட இருக்காது என படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
Bigil Movie Secrets Update : தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக இயக்குனரானவர் அட்லீ. இவர் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து விஜயை இயக்கி வருகிறார்.
ஏற்கனவே தெறி, மெர்சல் என இரண்டு படங்களை இயக்கி விட்ட நிலையில் தற்போது பிகில் என்ற பெயரில் மூன்றாவது திரைப்படம் உருவாகி வருகிறது.
செம ஜோடி.. பிறந்த நாளில் பாய் பிரண்ட் போட்டோவை வெளியிட்ட ரம்யா – கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்.!
பெண்களின் கால்பந்தாட்டடத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் துளியும் அரசியல் வசனங்களோ, பன்ச் டைலாக்குகளோ இருக்காது என அட்லீ தெரிவித்து இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
இறுதியாக வெளியான சர்கார் படத்தில் அளவுக்கு அதிகமான அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருந்ததே அந்த படத்திற்கு ஏற்பட்ட சறுக்கத்திற்கு காரணம் என விஜய் தெரிவித்துள்ளார்.
96 கெட்டப்பில் லாஸ்லியா, த்ரிஷா பதிவிட்ட ஸ்டேட்டஸை பார்த்தீங்களா? – வைரலாகும் போட்டோ.!
விஜய் ரசிகர்களும் இதையே தான் கூறி வந்தனர். இந்த நிலையில் அட்லீ தரப்பில் இருந்து இப்படியொரு தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.