Bigil Movie Review | Bigil Movie Review in Tamik | Bigil First Review | Vijay's bigil Review
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா, இந்துஜா, கதிர், யோகி பாபு, ஆனந்த ராஜ், விவேக் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.

Bigil Movie Review : 

அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

தளபதி விஜய் ராயப்பன், மைக்கேல் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரவுடி தனம் கலந்த மைக்கேல் பெண்கள் கால்பந்தாட்ட அணியை கோச்சராக வழி நடத்தி நேஷனல் லெவலில் அவர்களை எப்படி ஜெயிக்க வைக்கிறார்? இதில் என்னென்ன பிரச்சனைகள் நடக்கிறது? அதை விஜய் எப்படி எதிர்கொள்கிறார்? என்பது தான் இப்படத்தின் கதை.

( சுவாரஷ்யம் கருதி கதையை பெரிய அளவில் விவரிக்கவில்லை )

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

தளபதி விஜய் ஆக்ஷன், எமோஷன், செண்டிமெண்ட், காமெடி என அனைத்திலும் வழக்கம் போல தெறிக்க விட்டுள்ளார். புள்ளைங்களோ ஸ்டைலில் அவர் பேசியிருப்பதெல்லாம் அட்லீமேட்.

ராயப்பனின் கதாபாத்திரம் பக்கா மாஸ். பிகில் கதாபாத்திரம் அற்புதம்.

நயன்தாரா :

நயன்தாரா படம் முழுவதும் அவரின் பெயரிற்கு ஏற்றார் போலவே ஸ்கோர் செய்கிறார். விஜய்க்கும் அவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இவரும் லோக்கல் பாஷையில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கதிர் :

கதிர் அவரது ஸ்டைலில் நடிப்பை அழகாக கொடுத்து படத்திற்கு மெருகேற்றியுள்ளார்.

யோகி பாபு & விவேக் :

யோகி பாபு மற்றும் விவேக் ஆகியோர் அவர்களின் காமெடிகளால் சிரிப்பு கேரண்டி கொடுக்கின்றனர்.

மற்ற நடிகர் நடிகைகள் :

படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகள் என அனைவருமே அவர்களின் கதாபாத்திரங்களை கச்சிதமாக கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் வெறித்தனத்தை ஏற்றுகிறது.

எடிட்டிங் :

ரூபனின் எடிட்டிங் கனகச்சிதம். முதல் பாதியில் மட்டும் கொஞ்சம் நேரத்தை குறைத்திருக்கலாம்.

ஒளிப்பதிவு :

ஜி.கே விஷ்ணுவின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக காட்டியுள்ளது.

இயக்கம் :

அட்லீ இந்த படத்தை சிறப்பான திரைக்கதையுடன் கொண்டு சென்றுள்ளார். முதல் பாதியில் மட்டும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் படம் படு மாஸாக இருந்திருக்கும்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்
2. பெண்கள் மையப்படுத்திய கதையை விஜயை வைத்து கூறியது சிறப்பு
3, விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜாவின் நடிப்பு
4. ரஹ்மானின் இசை
5. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்.
2. முதல் பாதியின் வேகம் நம்மை உச்சு கொட்ட வைக்கிறது.

YouTube video

REVIEW OVERVIEW
பிகில் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
bigil-movie-reviewமொத்தத்தில் பிகில் விஜய் ரசிகர்களுக்கு வெறித்தனமான கொண்டாட்டம் தான். பெண்கள் பார்க்க வேண்டிய படம்.