Atlee and Archana
பிகில் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு அட்லீயே காரணம் என தயாரிப்பு நிறுவனம் சம்பளத்தில் இருந்து சிறு தொகையை திருப்பி கேட்பதாக பரவிய தகவலின் உண்மை வெளியே வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக பிகில் திரைப்படம் வெளியானது.

அட்லீ இயக்கி இருந்த இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. சொன்னதை விட இப்படத்தின் பட்ஜெட் பல கோடி அதிகமானது. இதனால் படமும் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது.

அப்படியிருந்தும் இப்படத்தின் வசூலால் யாருக்கும் பெரிய அளவில் லாபம் இல்லை. போட்ட பணம் மட்டுமே திரும்ப வந்ததாக தகவல்கள் பரவி வந்தன.

மேலும் பிகில் பட தயாரிப்பாளர், அட்லீயின் சம்பளத்தில் இருந்து ரூ மூன்று கோடியை திருப்பி கேட்டிருப்பதாகவும் தகவல் ஒன்று வைரலானது.

ஆனால் இது உண்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தயாரிப்பாளர் அட்லீயிடம் பணம் எதையும் திருப்பி கேட்கவில்லை என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.