Bigil Box Office
பிகில் படத்தின் வசூல் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முண்னனி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் ஒரு சிலரின் நெகடிவ் விமர்சனங்களுக்கும் ஆளாகி வந்தது.

இருப்பினும் ஆரம்பத்தில் படத்தின் வசூலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தான் இருந்து வந்தது. ஆனால் அதன் பின்னர் வேலை நாட்கள் தொடங்கி விட்டதால் பிகில் வசூல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று மொத்தமாக பிகில் திரைப்படம் 4 அல்லது 5 கோடி தான் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் எதிர்பார்த்த ஷேர் கிடைக்குமா? கிடைக்காதா? என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் விநியோகிஸ்தர்கள்.

இந்த வாரம் பெரிய அளவில் எந்த படமும் ரிலீஸாகவில்லை. வார இறுதி நாட்கள் நெருங்கி விட்டதால் மீண்டும் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் நம்பலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.