பிகில் படத்தில் குண்டம்மாவாக நடித்திருந்த இந்திரஜாவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Bigil Indraja Shankar Childhood Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

இந்த படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நயன்தாரா இந்துஜா வர்ஷா பொல்லம்மா, இந்திரஜா சங்கர் என பலர் நடித்து இருந்தனர்.

இந்த இந்திரஜா சங்கர் என்பவர் ரோபோ ஷங்கரின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இயல்பாகவே பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக இருப்பார் இந்திரஜா சங்கர்.

இவர் சிறு வயதில் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா அது என வியந்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.