விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தின் பல காட்சிகள் வேறு படங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளன என சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களோடு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாதி ஆக்ஷன், செண்டிமெண்ட், எமோஷன் எனவும், பிற்பகுதி கால்பந்து விளையாட்டு என அனைத்திலும் விஜய் பட்டய கிளப்பி இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிகில் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி ‘பீலே’ படத்தில் இருந்து சுட்டது என ஒருவர் ஆதாரத்துடன் டிவிட் செய்துள்ளார். இதில், பீலே படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைத்திருந்தார். எனவே, இரு காட்சிகளிலும் பின்னணி இசை ஒரே மாதிரியாக இருப்பதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.