தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாதி ஆக்ஷன், செண்டிமெண்ட், எமோஷன் என அனைத்திலும் விஜய் பட்டய கிளப்பி இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Vijay fans starts trending his Birthday : Thalapathy Vijay | Kollywood | Tamil Cinema | Latest Cinema News, Tamil Cinema News

ஆனால், இப்படத்தின் முதல் நாள் வசூல் விஜயின் முந்தைய படமான சர்கார் முதல் நாள் வசூலை தாண்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. சர்கார் திரைப்படம் சென்னையில் முதல் நாள் வசூலாக ரூ.2.40 கோடியை வசூல் செய்தது. ஆனால், பிகில் திரைப்படம் சென்னையில் ரூ.1.80 கோடியை வசூல் செய்துள்ளது. அதாவது, சர்காரை விட ரூ.60 லட்சம் குறைவாகவே பிகில் வசூலித்துள்ளது.

அதேநேரம், சர்கார் தனியாக வெளியானது. தற்போது கார்த்தியின் கைதி படமும் வெளியானதால் தியேட்டர்கள் பங்கிடப்பட்டது. எனவேதான், பிகிலின் முதல் நாள் வசூல் சர்காரை தாண்டவில்லை என விபரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.